தேனீக்கள்
எந்த அளவிற்கென்றால் ஆறு அறிவுடைய மனிதனை விட மிக அழகாக எப்பொழுதுமே ஒற்றுமையாக, தனது கூட்டிலுள்ள மற்ற தேனீக்களுக்கும்,தனது கூட்டை விருத்தி செய்து தன் கூட்டிலுள்ள அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்யும் ராணியை பாதுகாப்பதுமாகவும், தமது அங்கத்தவர்களுக்கு ஏற்படும் சுகயீனத்தை குணமாவடையச் செய்வதுமான சில முக்கியமான வேலைகளை இவ் ஐந்தறிவுள்ள தேனீக்கள் அழகான முறையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இன்று நாங்கள் மனிதர்களாகிய எங்களது அன்றாட முக்கிய தேவையில் ஒன்றான விலைப்பயிர்கள், அதாவது ஒரு பூ, பூவாகி, அது காய், கனி, கீரை, கிழங்கு போன்ற எந்த வகையாகவோ எமக்கு வந்தடையும் தின்பண்டங்களின் முதல் உதவியாளனான இறைவனுக்கு அடுத்ததாக, முக்கிய மூலகர்த்தாவாக விளங்குகின்றது இந்த தேனீக்கள்.
உதாரணமாக இன்று நீங்கள் சாப்பிடும் ஏதோவொரு கனியை எடுத்துக்கொண்டால், அந்தக் கனி ஒரு மொட்டாக இருந்து பூவாக மாறிய பின், அந்தப் பூ ஒரு பெண் ப்பூவாக இருக்குமேயானால், இன்னுமொரு ஆண் பூவின் கருவை கொண்டுபோய், பெண் பூவின் சூலகத்தில் பட்டால் மாத்திரமே அந்த மொட்டாக, பூவாக இருந்த ஒன்று, காயாக, கனியாக மாறி எங்களுக்கு அதைப் புசிக்கக் கிடைக்கின்றது.
அப்படி எங்களுக்கு கிடைப்பதற்கு தேனீக்கள்,வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள் மற்றும் காற்றின் உதவியுடன் இவ்வினச் சேர்க்கை நடைப்பெறுகிறது. அதிலும் தேனீக்களின் பங்கு தான் கிட்டத்தட்ட 80% அதிகமாக இருக்கின்றது.
அதுமாத்திரமின்றி அத்தேனீக்கள் பூக்களிலும்,கனிகளிலும் இருந்து Nectar எனப்படும் அமிர்த்தத்தை தமது வயிறுகளில் கொண்டுவந்து தேனாக மாற்றி அதையும் மனிதர்களாகிய எங்களுக்கு பலவகையான நோய்களுக்கு நிவாரணமாக தருகிறது (பார்க்க அல்-குர்ஆன் வசனம் 16:69) (அதன் வயிற்றிலிருந்து ஒரு பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.)
இந்தத் தேனீக்கள் அவைக்குரிய வேலைகள் அவைகளின் இடங்கள் போன்ற அனைத்தையும் அல்லாஹ் கூறியபடி (பார்க்க அல்-குர்ஆன் வசனம் 16:68) (உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள்).
அப்படி இத்தேனீக்கள் இறைவன் கற்றுக்கொடுத்த முறையில் அப்படி செய்யவில்லை எனில் எனது சொந்த கருத்தின்படி எப்படி ஒரு கையோ கனியோ உருவாக்குமென்றால்.
மேல் கிளையிலிருக்கும் ஒரு ஆன் பூ, கீழ்க்கிளையிலுள்ள பெண் பூவை சென்றடைந்து இனச்ச்சேர்க்கை செய்தாலே தவிர ஒரு காயாகவோ,கனியாகவோ மாறவேண்டும். அப்படி மாறுவதற்கு குறைந்தது ஆறுமாத காலம் தேவை. அது சாத்தியமுமில்லாதது.
எனவேதான் இத்தேனீக்கள் இவ்வேலைகளை அழகுற செய்து 80% மேலதிகமான இடத்தை அவை வகிக்கின்றன. நான் இவையனைத்தையும் வேறெங்கிருந்தும் கொண்டுவந்து இவ்விடத்தில் போடவில்லை, மாறாக ஒவ்வொரு விடயத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக இத்தேனீக்களை வளர்த்து அனுபத்தில் எழுதுகிறேன்.
முக்கிய குறிப்பு
பிற்காலத்தில் கல்வி கற்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அதிகமானவர்களுக்கு எனது இவ் அனுபவபூர்வ கட்டுரை பயனுள்ளதாக இருக்கும், அப்படி நீங்கள் பயன்பெற்றால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இறைவனிடத்தில் துஆ செய்யுங்கள்.
எனது மகன் அஹ்மட் அயான் அவரது 4 வயதிலும் மகள் சேஷா(z) அவருடைய 3 1/2 வயதிலும் நான் அவர்களுக்கு இப்பயிற்சியை வழங்கினேன், நீங்கள் இக்கட்டுரையை வாசித்து பயன் பெரும் தருணம் நான் உயிருடன் இருப்பேனா இல்லையா என்று நான் அறிய மாட்டேன், எனவேதான் எனது மகன், மகளை அணுகி உங்களுக்குத் தேவையான மேலதிக விடயங்களை தெரிந்து மற்றவர்களுக்கும் அதனை கற்றுக்கொடுங்கள். இது எனது யூடுப் சேனல் univercellsoft.

0 comments:
Post a Comment