Honey Bees in Tamil

 Welcome to UniverCellSoft Honey Bee Section.

 தேனீக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உங்களை வரவேற்கின்றேன்.




 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ...

முதலில் நான் என்னைப்பற்றிய தகவல். மற்றும் நான் எப்படி தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன் என்ற விடயத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனது பெயர் முஹம்மது அஸ்ஹர் (அன்சார் கைரூன் சகியா) ஆகியோரின் மூன்றாம் புதல்வன். நான் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம் குடிமகன்.

2016 ஆண்டிலிருந்து நீண்ட காலமாக எனக்கு தேனீ வளர்ப்பதற்கு ஆசை மற்றும் ஆவலோடு தேனீப் பெட்டி விற்பனை செய்பவர்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது என்னுடைய இந்து மற்றும் பௌத்த நண்பர்கள் மூலமாக ஒரு முக்கிய விடயத்தை செவியேற்றேன்.

அவ்விடயமானது என்னை குதூகலத்தில் ஆழ்த்தியது. மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டியும், எவ்வாறு அத கையாழ்வது என்ற பயிற்சியும் இலங்கை அரசு இலவசமாக வழங்குகிறது. என்னுடைய நண்பரின் மகன் அப்படிப் பயிற்சியெடுத்து இப்பொழுது  தேனீக்களை வளர்க்கின்றான் என்று அவர்கள் கூறியதுதான். 

உடனே நானும் மாத்தளை விவசாயத் திணைக்களத்தின் தொலைப்பேசி (0662243451) இலக்கத்திற்கு அழைத்து விபரத்தைக் கூறினேன். அதற்கவர்கள், இப்பொழுது எமது மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டி இல்லை என்று கூற நானும் கவலையுடன் அழைப்பை துண்டித்தேன் நன்றி கூறி.

இருப்பினும் விடாமுயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சில தினங்களில் மாத்தளை விவசாயத் திணைக்களத்துடன் பேசினேன். அப்பொழுது ஒரு பெண் ஊழியர் என்னைத் தொடர்புகொண்டு நீங்கள் அடுத்த மாதம் எங்களை அழைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள், அப்பொழுது எங்களிடம் உங்களுக்கு தேவையான அத்தேனீ கிடைக்க வாய்ப்புண்டு என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டு அடுத்த மாதமும் அழைத்தேன். ஆனால் எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை, தொடர்ந்து கிட்டத்தட்ட 2016 முதல் 2019 வரை முயற்சி செய்துகொண்டே இருந்தேன். ஆனால் எனக்கு என்னுடைய பெயரைக் கேட்டு விட்டு கூறினார், உங்களுக்கு வேண்டுமென்றால் ரூ. 1500 கொடுத்து தேனீப்பெட்டி மாத்திரம் வாங்க முடியும் எங்களிடம் தேனீக்கள் இல்லை என்ற அதே பதில் மீண்டும்.

ஆனால் எனக்கு அறிய வந்த விடயம் என்னுடைய வாடிக்கையாளரிடம் இருந்து. போன மாதம், அதற்கு முந்தைய மாதம் எல்லாம் மாத்தளை விவசாயத் திணைக்களத்தில் தேனீக்களுடன் தேனீப்பெட்டி கொடுத்தார்கள் ஆனால் தேனீப்பெட்டிக்கு மாத்திரம் ஒரு சிறிய அறவீடு செய்தார்கள் என்று.

நான் மீண்டும் முயற்சி செய்தேன் ஆனால் மீண்டும் எனக்கு ஏமாற்றமே.

அந்த ஏமாற்றத்திற்குப் பிறகு... நான் எனக்கு பல மொழிகள் பேச தெரிந்தவனாக இருந்த காரணத்தால், கனடா நாட்டு தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சில தேனீ வளர்ப்பாளர்களை இணையத்தில் தொடர்ப்புக்கொண்டு அவர்களிடம் இத்தேனீக்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.

அதுபோக இஸ்லாமிய மார்க்கமான எமது மார்க்க குர்-ஆனிலும் தேனீக்களைப்பற்றி இறைவன் கூறியிருப்பதை நான் அறிவேன். எனினும் எனது ஆசை இன்னும் அதிகமானது எப்படியாவது தேனீக்களைப்பற்றி முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று.

ஆனால் நான் கற்றவைகளை செயல் மூலம் அனுபவத்தில் அடைய என்னிடம் தேனீக்கள் இல்லை, அதற்கு முதலாவதாக இணையத்தில் தேடி ஒருவரிடம் ரூ.9500 செலவில் ஒரு தேன் பெட்டியை வாங்கினேன்.

எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் வளர்க்க ஆரம்பித்தேன். வளர்க்க ஆரம்பித்து 15-20 நாட்களில் அந்தத் தேனீக்கள் எல்லாம் ராணித் தேனீயைக் கூட்டிக்கொண்டு பெட்டியை விட்டு பறந்து விட்டன.

கவலையுடன் இருந்த நான் மீண்டும் செலவழித்து தேனீக்களை வாங்கிவந்தேன். ஒரு சில தினங்களில் அவையும் பறந்துவிட்டன. கவலைக்கு மேல் கவலை, கையில் காசுமில்லை மீண்டும் தேனீக்கள் வாங்குவதற்கு.

ஆனால் எனக்கு உறுதுணையாக இருந்த இறைவன் மற்றும் எனது மனைவி மாத்திரமே, அப்பொழுது என் மனைவி சப்fரினா கூறினால் என்னுடைய கவலையைப்போக்க, நீங்கள் யாருக்கும் அநியாயம் நினைப்பவரில்லை, ஹராத்தை தவிர்த்து வாழ்கின்றவர் எனவே ஏதாவது ஒரு நலவு இருக்கும் அது தான் அவையெல்லாம் பறந்துவிட்டன என்று, அப்பொழுது அவள் எனக்கு கூறிய ஆறுதல் என்னை மீண்டும் முயற்சி செய்ய வைத்தது.

இனி நான் தேனீக்களை வாங்கப்போவதில்லை ஆனால் எங்கிருந்தாவது தேனீக்களைப் பிடித்துவந்து வளர்ப்பேன் என்றேன் என் அன்பு மனைவியிடம். அதற்கு எனது மனைவியும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் என்றால்.

சில மாதங்களுக்கு பிறகு தேனீக்களை பிடித்து வந்து வளர்க்க தொடங்கினேன் இறைவனின் உதவியுடன். அன்றிலிருந்து இன்று வரை நான் இறைவனின்  உதவியுடன் மாத்திரம் எனது தேனீ வளர்ப்பை சிறப்பாக நடாத்தி வருகின்றேன். வேறெவரிடமும் உதவிகள் கேட்காமல் முக்கியமாக இலங்கை விவசாயத் திணைக்களத்தின் உதவிகள் இல்லாமல்.

இன்று நாடளாவிய ரீதியில் என்னிடம் தேனீப்பெட்டிகளை வாங்குவதற்கு வருகின்ற அனைத்து மத மக்களுக்கும் நான் மும்மொழியிலும், அனுபவப்பட்ட அனைத்து விடயங்களையும் அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து  தேனீப்பெட்டிகளை விற்கின்றேன்.

(நான் அனுபத்தில் அறிந்து கற்றுக்கொண்ட விடயங்களை இலங்கை விவசாயத் திணைக்களத்தில் கூட அறியாத விடயங்களை நான் அறிவேன், இன்னும் தேனீக்களுக்கு வரும் ஒருவித உண்ணிகளை போக்க முழு உலக தேனீக்கள் சங்கமும் முயன்றுகொண்டிருக்கையில், நான் என்னுடைய சில அனுபவ சிகிசிச்சைகள் மூலம் நீக்கியுள்ளேன், அதுமட்டுமல்லாமல் எனது Youtube Chenalலில் உலகளாவிய ரீதியில் பார்த்து பலன் பெறுவதற்காக காணொளியாக பதிவேற்றம் செய்துள்ளேன்.)

இவையனைத்தையும் கூறிய பிரதான காரணம், நீங்களும் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற ஒரு குறிக்கோளோடு எந்த விடயத்தையும் ஆரம்பியுங்கள்.


அல்ஹம்துலில்லாஹ்...


Next Page தேனீக்கள்

0 comments:

Post a Comment