தேனீக்களின் வாழ்க்கை
2. ஆன் தேனீ. (Drone Honey Bee).
1. வேலைக்காரி தேனீ. (Worker Honey Bees / None Productive Bee).
ஒரு தேன் குடும்பத்தில் மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தேனீக்கள் மாத்திரமே வசிக்கும்.
உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம் ஏன் 1,2,3 என்று போடுவதற்கு மாறாக 3,2,1 என்று குறிப்பிட்டுள்ளேன் என்று. காரணம் இருப்பதனால்தான் நான் அவ்வாறு வகைப்படுத்தியுள்ளேன். நீங்கள் வாசித்துக்கொண்டு செல்லும்போது உணர்வீர்கள் நான் ஏன் அவ்வாறு வகைப்படுத்தியுள்ளேன் என்பதனை.
3. ராணி தேனி (Queen Honey Bee/ Productive Bee)
வேலைக்காரி
தேனீக்களின் உதவியின்றி ஒரு ராணி
தேனியாக பிறந்த அந்த ராணி தேனீ, ஒரு தேனீ
குடும்பத்திற்கு ராணியாக முடியாது. விளக்கத்தை பின்னால் தெளிவுபடுத்தியுள்ளேன், சுவாரஷ்யத்துடன் வாசிக்கும் போது நீங்கள்
விளங்கிக்கிகொள்வீர்கள் இஷா அல்லாஹ்.
ராணி தேனீ என்ன சாப்பிடும்?அதன் வேலைதான் என்ன?
ராணி தேனீயின் சாப்பாடு என்னவென்றால், வேலைக்கார தேனீக்களின் தலையிலிருந்து சுரக்கும்
ஒருவகையான திரவம் (Royal Jelly /அரச கூல் )என்று அழைக்கப்படும்.
அதில்லாமல் வேலைக்காரி தேனீக்கள் இல்லாத பட்சத்தில் தனது உயிரைப்பாதுகாக்க
மெல்லிய வகையான ஓரிரு இனிப்புகளை சாப்பிடும். அவ்வினுப்பானது தனக்கு
அருகில் இருந்தால் மாத்திரமே சாப்பிடும், மாறாக வெளியில் சென்று பூக்களின் அமிர்தத்தை
தேடிப்போய் சாப்பிடாது.
அந்த (Royal Jelly) எனப்படும் சாப்பாடானது கருவிலிருந்து
இறக்கும் வரை ராணி தேனீக்கள் மாத்திரமே அதைச் சாப்பிடும்.
மற்ற தேனீக்கள் எதுவும் பிறந்த மூன்று நாட்களைத் தவிர அதன் பின்னர் எந்தவொரு தேனீயும் அதையும் சாப்பிடாது.
ராணி ததேனீ என்பது அதிகமான
முட்டைகளை இடுவதற்கும், நீண்ட நாட்கள்
திடகாத்தமாக வாழ்வதற்கும், தனது குடும்ப
அங்கத்தவர்களை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த (Royal Jelly) எனும் சாப்பாட்டை
சாப்பிட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அதுவும் தாமாக சாப்பிடாது, வேலைக்காரி தேனீக்கள் ஊட்டிவிடவேண்டும்.
ராணி தேனீ மலர்களின் அமிர்தத்தைச் சேகரிக்குமா?
ராணி தேனீயின் வேலை என்னவென்றால் தனது
குடும்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு அதிகமான முட்டைகளை இடும். அதன்
முட்டைக் கருவிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்கு 80 தொடக்கம் 90 வரையான முட்டைகள் இடும்.
ஒருநாளைக்கு சுமாராக 2000 முதல் 3000 இற்கும் மேலதிகமான
முட்டைகளை இடுகின்றன.
அதிகமான முட்டைகளை
கருக்கட்டுவதற்காக வேலைக்காரி தேனீக்கள் அதற்கேற்றவாறு ராணி தேனீக்கு (Royal Jelly) யை மட்டும் உணவாக
ஊட்டும். ராணித் தேனீயின் உடம்பில் ஓரளவிற்கு மேலதிகமாக (Royal Jelly) உட்கொள்ளும் போது
மாத்திரம் முட்டையாக இடும்.
ஓரளவிற்கென்றால் ராணி தேனீ உயிர்வாழ தேவையான, அதாவது ராணியின் பசிக்கேற்ப அதன் பசியைப்போக்க சாப்பிடும் (Royal Jelly) யின் அளவையும் விட அதிகமாக (Royal Jelly) யை சாப்பிடும் பட்சத்தில் ராணித் தேனீ அதனை முட்டையாக வெளிப்படுத்தும்.
2. ஆன் தேனீ (Drone/Male Honey Bee)
ஆன் தேனீ என்பது ஒரு ஆன் இனத்தை/வர்க்கத்தை
சேர்ந்தது. அது பிறக்கும் போதே மற்றவர்களின் உதவியுடன் தான் பிறக்கும்.
ஆன் தேனீ என்பது இதனுடைய தாய் (இன்னொரு ராணி தேனியின்) கருக்கட்டப்படாத முழுமை நிலையடையாத முட்டையிலிருந்து பிறந்த மூன்றாம் நாளிற்குப் பிறகு (Bee Bread) என்கிற உணவை வைத்து தேன் அடையை மூடிவிடும் . பின்னர் மூடிய தேன் அடைக்குள் உள்ள (Larvae/ நுண்புழு) வானது உணவை உண்டு 24 நாட்களில் முழு ஆன் தேனியாக வேலைக்காரி தேனீக்களின் உதவியுடன் மெழுகிலிருந்து வெளியே வரும்.
ஆன் தேனீ என்பது வேலைக்காரி
தேனீக்களைப் போன்றில்லாமல் உருவில் பெரியதாகவும், பெரிய கண்களையும் கொண்டதாகவும், கொட்டுவதற்கு கொடுக்கு அற்றதாகவும், ராணி தேனீயின் பருமனையும் கொண்டிருக்கும்.
ஆன் தேனீயின் வேலை ராணி தேனீயுடன்
இணைந்து இனச் சேர்க்கை செய்வது தான் என்றெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அப்படித்தான் நானும் அறிந்திருந்தேன் இவைகளை கூர்ந்து கவனிக்காமல். ஆனால் உண்மைநிலை அதுவல்ல…
ஆனால் நான் எனது தேனீ வளர்ப்பின் அனுபவத்தில் படித்த விடயம் என்னவென்றால் ஆன் தேனீ என்பது ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செய்வது போலவே, தனது தேனீ குடும்பத்தை அதிக குளிரிலிருந்து பாதுகாக்கின்றது.
எந்தளவிற்கு என்றால், ராணி தேனீயுடன் ஒரு சில குறிப்பிடத்தக்க ஆன் தேனீக்களே இனச்சேர்க்கை செய்கின்றன. அதிலும் இனச்சேர்க்கை செய்து ஆண் தேனீயின் விந்து ராணி தேனீயின் கருவிற்கும் சூலகத்திற்குமிடையே மாட்டிக்கொண்டவுடனே, இனச்சேர்க்கை செய்த ஆன் தேனியானது கீழே விழுந்து சில நிமிடங்களிலேயே இறந்து விடும்.
காரணம் ஆன் தேனீயின் இனப்பெருக்க உறுப்பானது ராணி தேனீயின் சூலகத்தில் மாட்டிக்கொண்டு கிழிந்து விடுகிறது, அதாவது ஆன் தேனீயின் ஒரு பாகம் அதன் உடம்பிலிருந்து வேறாகி ராணி தேனீயின் உடம்பில் சிக்கிக்கொள்கிறது.
அதுமட்டுமல்லாமல்
கடும் குளிர் காலங்களிலும், மழைக்
காலங்களிலும் மீதமுள்ள (ராணியுடன்
இனச்சேர்க்கை செய்யாத) ஆன் தேனீக்கள், கூட்டின்
வாயிலிலும், தனது கூட்டிற்கு குளிர்
உள்வாங்கப்படும் இடங்களிலும் நின்றுகொண்டு, ஒன்றோடொன்று
பிணைந்து பிடித்துக்கொண்டு அனைத்து ஆன் தேனீக்களும் மூடிக்கொண்டிருக்கும் குளிர்
தமது கூட்டிற்குள் ஊடுருவிச் சென்று சிறிய
குழந்தைகள் இறப்பதை தவிர்க்கின்றன.
எந்தளவிற்கென்றால் தமது உயிரைக் கொடுத்து தமது கூட்டினிலுள்ள ராணி,வேலைக்காரி தேனீக்கள் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகிய அனைவரையும் இருந்துவிடாமல், தான் இறந்தாலும் பரவாயில்லை தமது குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று காத்துக்கொண்டுண்டிருக்கும்.
ஆன் தேனீக்கள் ஒன்றோடு ஒன்று புனைந்துகொண்டு அதிக வெப்பத்தை வெளியாக்கும், அப்படி அதிக வெப்பத்தை வெளியாக்கும் போது உணவு உற்கொள்ளவில்லையெனில் சிறிது நேரத்திலேயே மற்ற ஆன் தேனீக்களைப் பற்றிப்பிடித்தவாறு உயிரை விட்டிருக்கும்.காரணம், உயிரிழந்த பிறகும் பற்றிப்பிடித்தவாறே குளிரை கூட்டிற்குள் ஊடுருவச் செய்யாமல் வழியை அடைத்தவாறே இறந்திருக்கும்.
ஆன் தேனீக்களை பொறுத்தவரை ராணி
தேனியைப் போன்றே ஆன் தேனீக்களும் வேலைக்காரி தேனீக்களால் உணவு
ஊட்டப்படுகிறது. அவைகளிரண்டினது
சாப்பாட்டிற்கு வித்தியாசம் உண்டு. ராணி தேனீ சாப்பிடும் (Royal Jelly) யை ஆன் தேனீக்களுக்கு
வழங்காது, மாறாக மகரந்தம்
மற்றும் தேன் இரண்டையும் கலந்து ஒரு வகையான கலப்பு சாப்பாட்டை க் கொடுக்கும்
அதற்கு (Bee Bread) /தேன் ரொட்டி எனப்படும்.
ஆன் தேனீக்கு
கடித்து எடுக்கக் கூடிய கடினமான உதடுகளோ,வேலைக்காரி
தேனீக்களைப் போன்ற நீண்ட நாக்கோ, கால்களில்
மகரந்தப்பையோ, கொட்டுவதற்கு கொடுக்கோ
இல்லை. மாறாக ஆன்
தேனீக்களுக்கு பலமான சிறகுகளும், பெரிய கண்களும்
இருக்கும்.
எனவே ஆன்
தேனீக்கள் தமது முட்டையிலுருந்து பெண் தேனீக்களைப் போல் தாமாக தேன் அடை (தேன்
மெழுகு) ஐ கடித்துக்கொண்டு வெளியே வரமுடியாது, வேலைக்காரி தேனீக்களின் உதவியுடன் தான்
முட்டையிலிருந்து வெளியே வரும் ஆன் தேனீக்கள்.
ஆன் தேனீக்கள் உருவத்தில்
பெரியதாக வண்டுகளைப்போல் இருப்பதால் தமது கூட்டிற்கு ஆபத்துக்கள்
வரும்பட்சத்தில், அவை எதிரிகளை
தாக்குவதற்கு முற்படும். ஆனால் அவைகளுக்கு கொட்டுவதற்கு கொடுக்கு
இல்லாதகாரணத்தால் அவை தம் எதிரிகளின் உடம்பில் வேகமாக கற்களை எரிவதை போல் வந்து விழும்
பட்சத்தில், எதிரிகள் பயந்து
தாக்குவதை நிறுத்தி விட்டு அவ்விடத்தை விட்டு விரண்டோடிவிடும்.
ஆறறிவுள்ள
மனிதனர்களாகிய எங்களுக்கு தெரியும் ஆன் தேனீக்கள் கொட்டுவதில்லை என்பது. எனவே ஆன் தேனீக்களை
வெறுங்கையால் அனைவருக்கும் பிடிக்க முடியும். சிலர் என்னிடம் கேட்டதற்கான
பதில் (நீங்கள் எப்படி கொட்டக்கூடிய வேலைக்காரி தேனீக்களையும் வெறுங்கையால், முகக்கவசம் ஏதுமின்றி கையாளுகிறீர்கள் என்று).
அதற்கான பதில் (
நீங்களும் தேனீக்களை வளர்க்கும் சந்தர்ப்பத்தில், அவை சில கொட்டும், சில காட்டுவதில்லை, அதிலும் தேனீக்களை வளர்க்கும் போது அவைகளை தமது
செல்லப்பிராணிகளைப் போல் வளர்க்க வேண்டும்
அப்பொழுதுதான் அவைகளுக்கும் உணர்வுகள் இருப்பதை அறிவீர்கள், அவைகளுக்கு கஷ்டங்கள், வலிகள் போன்றவற்றை கொடுக்காமல் மெதுவாக நாம்
கையாளும் போது அவை எம்மை கொட்டுவதில்லை மாறாக தமது செல்லப்பிராணிகளாகவே மாறி
எங்களுடன் நடந்துகொள்ளும்).
என்னுடைய மகன் அஹமட் அயானும் என்னைப்போலவே எல்லாத் தேனீக்களை வெறுங்கைகளால் பிடித்து விளையாடும் காட்ச்சியை பார்க்க இந்த லிங்க் ஐ கிளிக் செய்து பாருங்கள்.
My Son Enjoying with Honey Bees 1 , My Son Enjoying with Ho ney Bees 2
1. வேலைக்காரி தேனீ. (Worker Honey Bees / None Productive Bee).
வேலைக்காரி தேனீக்கள் பெண் இனத்தைச்சேர்ந்த கருக்கட்டிய முட்டையிலிருந்து பிறக்கும்.
ஆனால் அது பிறந்த மூன்றாம் நாளிற்குப் பிறகு மற்ற வேலைக்காரி தேனீக்கள் ஆன் தேனீக்களுக்கு போலவே (Bee Bread) என்கிற உணவை வைத்து தேன் அடையை மூடிவிடும் .பின்னர் மூடிய தேன் அடைக்குள் உள்ள (Larvae/ நுண்புழு) வானது உணவை உண்டு (21) நாட்களில் தேன் மெழுகிலிருந்து தாமாகவே தேன் அடையை கடித்து துளையிட்டு வெளியே வரும்.
பிறந்த அடுத்த கணமே அதனுடைய பெயரிற்கு பொருத்தமான (வேலைக்காரி) என்பதனை உணர்த்தும் வகையில் அதனுடைய வேலையை ஆரம்பித்து விடும்.
பிறந்து சில வினாடிகளிலேயே வேலையை செய்ய ஆரம்பிக்கும் ஒரே உயிர் தேனீ என நினைக்கின்றேன்.
தேனீக்களின்
வாழ்க்கையை நாம் 4 கட்டங்களாக பார்ப்போம்.
கட்டம்-01
இத்தேனீக்களின்
முதல் வேலையாக, தாம் வெளியே வந்த அந்த
புழு அறையை சுத்தம் செய்வது.
இவ்வேலையானது
வேலைக்காரி தேனீக்கள் கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு அறைகளை சுத்தம் செய்யும் வேலையை
செய்யும். சுத்தம் செய்த
பின்னர் ராணி தேனீ அவ்வறையில் மீண்டும் புதிதாக முட்டையிடும். எனவே இதை முதல்
வேலையாகவும் முதல் கட்டமாகவும் இருக்கும். ஆனால் இம்முதல் கட்டத்தில் இத்தேனீக்களுக்கு
பறக்க முடியாது.
7 நாட்களுக்குப் பிறகு தாம் ஓரளவு
வளர்ந்து பெரிய தேனீக்களாக மாறி பெரிய வேலைகளான வீடு கட்டுதல், (தேன் ஆடைகளை கட்டுதல்)தம்
வீட்டைப் பாதுகாத்தல் (தமது வீட்டின் வாயிலில் இருந்தபடியே எதிரிகள் உள்ளே வராமல்
பாதுகாத்தல்)மற்றும் வீட்டிலுள்ள உணவியப்பொருட்களை (வெளியிலிருந்து மற்ற தேனீக்கள்
கொண்டு வரும் உணவுகளை)சேகரித்து வைத்தால் போன்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்.
இதுவும்
இன்னுமொரு 7நாட்களுக்கு நடக்கும். கிட்டத்தட்ட மூன்றாவது கட்டமும் 7 நாட்கள்
செய்கின்றன.
கட்டம்-04
இந்த கட்டமானது
தேனீக்களுக்கு ஆபத்தான வேலையாகும்.ஏனென்றால் முதன் முதலாக தமது வீட்டை விட்டு
வெளியே பறந்து சென்று அவைகளின் உணவுகளான பூத்தேன்,மகரந்தம், நீர், உப்பு போன்றவற்றை சேகரிக்கச் செல்லும்.
இந்த வேலைகளானது
கிட்டத்தட்ட 40,41 வது நாட்களிலிருந்து 50 நாட்களுக்கு செய்யும்.
பின்னர் 50
லிருந்து 55 அல்லது 60 நாட்களுக்குள் தமது மரணத்தை சந்தித்து
அவைகளின் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.
தமது உயிரை பணையம் வைத்து தமது இனத்தினை பெருக்க வேண்டும் என நினனைத்து தான் செயல்படுகிறது இதேனீக்கள்.
இறுதியாக
இதேனீக்கள் இறந்த பின்னர் அவைகளை வெளியே எடுத்துச் சென்று மிக தொலைவில் இறந்த உடலை
வீசிவிட்டு மீண்டும் தமது கூட்டிற்கு திரும்பும் அந்த வேலைக்குரிய தேனீ.
இவ்வளவுதானா?
என்று நீங்கள்
நினைப்பீர்கள், ஆனால் அவ்வளுவு அல்ல.
உதாரணமாக ஒரு தேனீக்கு நோய்
ஏற்பட்டுவிட்டால்,
அந்த நோயை
குணமாக்கவோ , அதற்கான மாற்று
மருந்துகளை செய்யவோ அத்தேணீ அதன் பரம்பரையில் அந்த வேலைகளை எதிர்கொள்ளக்கூடிய
ஒரு ராணியின் முட்டையிலிருந்து வந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் மாத்திரமே
அந்நோயிலிருந்து அவைகள் அனைத்தும் அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெரும்.
அதனால்தான் தேனீக்களை வளர்ப்பதற்காக நீங்கள் வாங்கும் அத்தேனீயின் (GENETICS} ஐ பார்த்து வாங்க வேண்டும் என நாம் அறிவிக்கின்றோம்..
தேனீக்களை வாங்க தொடர்ப்புகொள்ளவும்
MOHAMED AZHAR +94787773344 Matale, Ukuwelalllla.




.jpg)





0 comments:
Post a Comment